பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சாஸனங்கள்

களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. கடைசியாக அகப்பட்டிருக்கும் இந்த அசோக லிகிதத்தில் பியதஸி என்ற பெயருடன் அசோகன் என்ற பெயரும் காணப்பட்டிருக்கிறது. அவதாரிகை, 8-ம் பக்கம் பார்க்க.

இரண்டாவது உப-சாஸனம் 1, 2, 3, 7 ஊர்களில் காணப்படவில்லை. மைசூரிலுள்ள மூன்று இடங்களில் மட்டும் முதல் சாஸனத்துக்குப்பின் வரைந்து காணப்படுகிறது. ஆனால் இதற்கு ஓரிடத்தில் மட்டுமே சுத்தமான பிரதியுண்டு.

முதல் உப சாஸனம் பலவிதத்தில் அசோகனுடைய சரித்திரத்திற்கு முக்கியமான ஆதாரமாகின்றது. அவன் புத்தர் சமயத்தைச் சரணமடைந்தது திடீராகவல்லவென்றும் கொஞ்சங் கொஞ்சமாக அதில் ஈடுபட்டதாகவும் இச்சாஸனம் அறிவிக்கின்றது. புத்தர் மதத்தில் தான் முக்கியமாகக் கற்ற பாடங்கள் அறநெறியில் விசுவாசமும் உழைப்பும் ஊக்கமுமேயென்றும் இதிலிருந்து விளங்கும்.

“தேவர்களை அனுசரித்து ஒழுகாமனிதர் இப்போது தேவர்களை அனுசரித்து ஒழுகி வருகின்றனர்?” என்ற வாக்கியம் அரசனுடைய ஆஸ்திக மதத்தை விளக்கும். ஆனால் இவ்வாக்கியத்தின் கருத்து இதுவேயென்று சாதிக்க முடியாது. “இது வரையும் உண்மையென்று கருதப்பட்ட தெய்வங்கள் இப்போது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றும் இவ்வாக்கியம் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. மூலத்திலுள்ள வாக்கியத்தில் மீஸா, அமிஸா என்ற சொற்களின் கருத்து விளங்காததால் மொழிபெயர்ப்பில் இங்கனம் விபரீதங்கள் ஏற்பட்டன எனலாம். 'மிஸம்' என்ற சொல் மிச்ரம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாயின் முன்கூடறிய உரையும் ‘ம்ருஷா’, பொய்ம்மை, என்ற சொல்லின் திரிபாயின் இரண்டாவது கருத்தும் ஏற்படும்.