பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் உபசாஸனம்

85

முதல் உபசாஸனம்: உழைப்பின் பயன்

A. ஸுவர்ணகிரியிலுள்ள1 இளவரசரும் மகாமாத்திரரும் சேர்ந்து இஸிலத்திலுள்ள2 மகாமாத்திரருக்கு க்ஷேமம் வினவியபின் இக்கட்டளை யிடப்படுகின்றது. தேவர்களுக்குப் பிரியனானவன் இங்ஙனம் ஆக்ஞாபிக்கிறான். நற்காரியங்களில் விசேஷ ஊக்கம் செலுத்தாமல் இரண்டரை வருஷங்களுக்கு மேலளவும் நான் உபாஸகனாயிருந்தேன்3. இப்போது ஒருவருஷமாக ஸங்கத்திற் சேர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு உழைத்துவர எனக்கு நேரிட்டிருக்கிறது. இதுவரையும் தேவர்களை அனுசரித்து ஒழுகா மனிதர் இப்பொழுது ஜம்பூத்வீப முழுவதும் தேவர்களை அனுசரித்து ஒழுகிவருகின்றனர்4. இது எனது உழைப்பின் பயனாகும். இந்நன்மை பெருமுயற்சியின்றிக் கிடைக்கக்கூடியதன்று. ஆனால் சிறியோரும் தமது உழைப்பால் மறுமையின் க்ஷேமத்தை யடையலாம். இதனாலன்றோ “சிறியோரும் பெரியோரும் முயன்றுவரட்டும்” என்ற முதுமொழி ஏற்பட்டுள்ளது5. என் அயலாரும் இப்போதனையை உணர்ந்து இத்தகைய நன்முயற்சியை அழியாதபடி நிலைநாட்ட வேண்டும். இவ்வுத்தேசம் கட்டாயமாய் வளரும். இன்னுமின்னும் பல மடங்கு பயனளிக்கும். இப்போதனை 256 வ்யூதர்களால் பிரசுரஞ் செய்யப்பட்டது.