பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/98

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86

சாஸனங்கள்


B. இக்கட்டளை கூடுமளவும் எங்கு சௌகரியப்படுமோ அங்கே கற்களிலும் ஸ்தம்பங்களிலும் எழுதி விளம்பரஞ்செய்யப்பட வேண்டும். நீரும் இயன்ற அளவு உமது பிராந்தியத்தில்6 இக்கட்டளையை விளம்பரஞ் செய்ய வேண்டும். இருநூற்றைம்பத்தாறு, (256) வ்யூதர்களால்7 இப்புண்ணிய ஆக்ஞை கொண்டு வரப்பட்டது.

மொத்தம் ஸித்தாபுர லிகிதத்தில் 13 வாக்கியங்கள், கடைசிப்பாராவிலுள்ள மூன்று அதிகப்படியான வாக்கியங்கள் ரூபநாத் பிரதியில் காணப்படுகின்றன, ஸஹஸ்ராம் பிரதியில் 256 என்ற எண் எழுத்திலும் இலக்கத்திலும் இருக்கிறது. முதலாவது வாக்கியம் வட இந்தியப்பிரதிகளிலில்லை,

I. ஸுவர்ணகிரி. இதுவே அசோகனுடைய தென்மாகாணத்தின் ராஜதானிபோலும். இளவரசர் இங்குத் தங்கியதாக இந்த லிகிதம் நமக்குத் தெரிவிக்கிறது.

2. இஸிலம். இது ஸுவர்ணகிரிக்குச் சமீபமுள்ள ஊராயிருக்க லேண்டும். மகாமாத்திரர் என்ற பெயர் பொதுப் பெயரானதால் இஸிலத்து மகாமாத்திரர் ஒரு ரஜூகனாகவாவது பிராதேசிகனாகவாவாது இருக்கலாம்.

3. உபாஸகன். இல்லறத்தில் ஒழுகும் பௌத்தமதத்தினன்.

4. ஸித்தா புரத்திலுள்ள மூலவாக்கியம்,இமீனாவ காலேன அமிஸா ஸமானா ஜம்வதீபஸி மீஸா தேவேஹி.

5. ஸாவனே. போதனை ; முதுமொழி ; “சிறியோரும் பெரியோரும் முயன்று வரட்டும்” என்பது அரசனுடைய ஆப்த வாக்கியமோவென்று தோன்றுகிறது, எழாம் ஸ்தம்பசாஸனத்திலும் அரசன் இம்முது மொழியைக் குறிப்பிடுகிறான்.

6. ஆஹாலே. தாலூக்கா அல்லது நாடு.

7. வ்யூதர். தர்மபோதகர் (?). முன் 55-ம் பக்கம் காண்க.