பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் உபசாஸனம்

87

இரண்டாம் உபசாஸனம் : தர்மத்தின் சாரம்

தேவர்களுக்குப் பிரியனானவன் இப்படிச் சொல்லுகிறான். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யவேண்டும். எல்லா ஜீவப் பிராணிகளுக்கும் அனுதாபம் ஸ்திரமாக ஏற்படவேண்டும். சத்தியமே பேசவேண்டும். தர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ள போதனைகள் இவையே மேலும் சீஷன் ஆசாரியனைக் கண்ணியஞ்செய்யவேண்டும். உற்றார் உறவினருக்குத் தகுந்த மரியாதை செய்யவேண்டும். இது தீர்க்காயுளைத் தரும். இது பிராசீன சம்பிரதாயம். இதன்படி மனிதன் நடக்கவேண்டும்.1

பதன் என்ற லிபிகரனால் 2 (எழுதப்பட்டது.)

மொத்தம் 8 வாக்கியங்கள் :-

1. இந்தச் சாஸனம் ஓர் உபநிஷத்தில் வரும் வாசகங்களுடைய தமிழ் மொழிபெயர்ப்போ என்று நம்மை பிரமிக்கச் செய்கிறது. தைத்தரீய உபநிஷத்து சிக்ஷாவல்லியின் முடிவு ஏறக்குறைய இப்படி இருக்கின்றது.

2. பதன் என்ற விபிகரன் அல்லது குமாஸ்தா தான் வட நாட்டினன் என்று காட்டுவதற்குப்போலும் லிபிகரன் என்ற சொல்லை மட்டும் கரோஷ்டி லிபியில் எழுதிவைத்திருக்கிறான்.