பக்கம்:அசோகர் கதைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அசோகர் கதைகள்

"தம்பீ. எந்த வாசகத்தைச் சொல்கிறாய்?" என்று பின்னாலிருந்து ஒரு குரல் கேள்வி எழுப்பியது.

இளைஞன் மகாலிங்க சாஸ்திரி திரும்பிப் பார்த்தான்.

குடியானவரைப் போன்ற உடை யணிந்திருந்த ஒருவர் திண்ணைத் தூண் ஒன்றிலே முதுகை வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உடைதான் அவரை ஒரு குடியானவர் போல் காட்டியதே தவிர, அவருடைய வளையாத உடலும் நிமிர்ந்தகன்ற மார்பும் நேர் கொண்ட பார்வையும் எல்லாம் ஒருவிதமான கம்பீரத்தை உருவாக்கிக் காட்டின. அவருடைய கண்களிலே தோன்றிய அந்த ஒளி இளைஞனின் உள்ளத்தை எளிதாகக் கவர்ந்தது.

இளைஞன் மகாலிங்க சாஸ்திரியோ இரண்டு இதிகாசங்கள், நான்கு வேதங்கள், ஆறு சாத்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள், அறுபத்து நான்கு கலைஞானங்கள் அத்தனையும் ஆசான் மூலமாகப் பாடங்கேட்ட ஒரு வித்துவான். அந்த மனிதரோ ஒரு சாதாரண குடியானவர். இருந்தாலும் அவரிடம் தன்னேவிட ஏதோ ஒர் ஆற்றல் மிகப் பெரிய ஆற்றல் கூடுதலாக அமைந்திருப்பதாக இளைஞனுக்குத் தோன்றியது.

"அதோ எழுதியிருக்கிறதே, 'மூத்தோரைப் போற்று' என்று, அந்த வாசகத்தைத்தான் சொல்கிறேன்" என்று இளைஞன் இந்தக் குடியானவருக்குப் பதில் கூறினன்.

"அதிலே என்ன தவறு கண்டாய்?" திருப்பிக் கேட்டார் அவர்.

"ஐயா, அறிவாலோ அனுபவத்தாலோ பெரியவர்களைப் போற்று என்றால் பொருளிருக்கிறது. வயதால் மூத்தவர்களைப் போற்று என்ற பொருளை மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/30&oldid=734152" இலிருந்து மீள்விக்கப்பட்டது