பக்கம்:அசோகர் கதைகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

47

போகிறோம் என்ற நினைப்பில் அவன் மனம் கிளர்க் தெழுந்தது வியப்பிற்குரியதல்லவே!

அசோகர் வரும் நேரத்தை எதிர்பார்த்து அவன் ஆவலோடு காத்திருந்தான். அவன் கொண்டு வந்த மான் அன்று சிறப்பான கறியாகச் சமைக்கப்பட்டிருந்தது.

மாலை உணவுக்குத்தான் அசோகர் வருவதாக இருந்தார். எனவே அந்திப் பொழுது நெருங்க நெருங்க அரண்மனையில் எல்லோரும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாக வும் வேலைகளைக் கவனிக்கலானார்கள். கோட்டை வாயிலிலேயே, மன்னர் மாமன்னரை எதிர் கொண்டு வரவழைக்க ஆயத்தம் செய்யப்பட்டது.

கதிர் மறைய இன்னும் ஒரு காழிகைப் பொழுது இருந்தது.

வீரமுரசம் அதிர்ந்தது.

தொடர்ந்து கணகணவென்ற மணியோசை எழுந்தது.

புத்தம் சரணம் கச்சாமி !

தருமம் சரணம் கச்சாமி !

சங்கம் சரணம் கச்சாமி !

பிட்சுக்கள் சூழ அசோக மாமன்னர் அரண்மனை வாயிலினுள் நுழைந்தார். காசி மன்னர் அவரை வணங்கி வரவேற்றார். தம் பரிவாரங்கள் சூழ மாமன்னரையும் உடன் வந்த துறவிகளையும் அரண்மனையினுள் அழைத்து வந்தார்.

மழுங்க வழித்த தலையும் காவியுடையுமாகக் காட்சி யளித்த நூறு பிட்சுக்களின் நடுவிலே, ஒளிமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/49&oldid=734172" இலிருந்து மீள்விக்கப்பட்டது