பக்கம்:அசோகர் கதைகள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது.

மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அவருடைய மனக் கவர்ச்சியாற்றல் தான்!

மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு திரு. நாரா நாச்சியப்பன் புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும், இரு பயன் நல்கும் இக்கதைகளைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.

--தமிழாலயம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/6&oldid=479305" இலிருந்து மீள்விக்கப்பட்டது