பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கொஞ்சம் காசுவரும் என்ற அல்ப ஆசையை பல வாக வளர்க்கிறது பொருளாதாரம் பெற்றோர்களின் மனதிலே. அதனால் மனித சமுதாயத்தின் பெரும் பாலோரது வாழ்வு பாழாகிறது, அறிவுக்கு இருட்டடிக்கப்படுகிறது. - இதை உணராதவர்கள் பலர். உணர்கிறவர்களும் உண்டு. இருந்தாலும் மாற்றுக் காண சமுதாய அமைப்பு முறை இன்று இடம் தரவில்லை!

வாழ்வின் ஒவ்வொரு துறையிலும், மனிதகுலத்தின் பெரும்பகுதியினர் ஒடுங்கி ஒடுங்கி அடிப்படியிலே நின்றுவிடத் தான் வழிகாட்டுகிறது சமுதாய அமைப்பும், பொருளாதாரமும் பிறவும்.

இவை மாற வேண்டும், இன்றைய தர்மம் மாண்டு மடியவேண்டும்; பொருளாதார அநியாயங்கள் மண்ணாகவேண்டும்; அரசியல் தகிடுதத்தங்கள் அழிக்கப்பட வேண்டும்- இப்படி அறிஞர்கள் எவ்வளவோ காலமாகச் சிந்தித்தும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள்: வருகிறார்கள்; வருவார்கள்.

ஒரு சில அறிஞர்கள் மட்டும் குமுறிக்குமைந்து அனல் கக்கிவிடுவதனாலே ஒன்றும் செய்துவிட முடியாது தான்.

ஆனல் எதுவும் விளையாது என்று சொல்லிவிட முடியாது.

ஒரு இடத்திலே வைக்கும் பொறி, தீயாகி எங்கும் பரவுகிற பெரு நெருப்பாக மாறுவது போல, ஒரு சில அறிஞர்கள் சமுதாயத்திலே சிதறிவருகிற சிந்தனைக்கனல் பொறிகள் மக்களின் உள்ளத்திலே வேலைசெய்யும். அறிவுத் தீ குதித்துப் பெருகும்.

பலரது எண்ணங்களும் எழுத்தும் சொல்லும் அறிவுக் கனலை எங்கும் பரப்பவேண்டும். ஒவ்