பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதல்

(திருவா 213)

நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும்

நகைப்பும் சிரிப்பும் விளைவித்தல்

நகை நட்டுக்கள்

நச்சுப்பிச்சு - ஓயாத் தொந்தரவு

நச்சுப் பிச்சு என்று கேட்டு நச்சரித்தல்

நச்சும் பிச்சும் - வீண் அல்லது அற்பக் காரியங்கள்

நசித்து அழிந்து போதல்

நசுக்கி அமுக்குதல்; அழித்தல்; ஒடுக்குதல்

நசுக்கிப் பொசுக்கிவிடல்

நசுங்கிக் கசங்கிப் போதல்

நசுங்கி நலிந்து போன ; நைந்து போன

நசுங்கிப் பொசுங்கிப் போன

நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல் (பதிற்

றுப் 55)

நஞ்சான் குஞ்சான் - மெலிந்த குழந்தை குட்டிகள்

நஞ்சினுங் கொடிய நெஞ்சுடைய நாஸ்திகர் (இரட்ச

21-247)

நஞ்சுடை நெஞ்சத்து வஞ்சகர்

நட்ட நடுவில், நட்ட நடு மத்தியில்

நட்டு முட்டு - ஆடல்பாடல், நடனத்துக்குரிய தளவா

டங்கள்

நட்டுவனும் முட்டுவனும் (முட்டுவன் - மத்தளக்காரன்)

நட்பும் நல்லுறவும் வளர்ந்தோங்க

நட்பும் நல்லெண்ணமும் உடையவர்

நட்பும் பெட்பும் உடையோர்

நடத்தையும் போக்கும் நன்றாயில்லை

நடப்பும் போக்கும் நன்றாயில்லை