பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்

சினோர் (பட்டினப் 206-7)

நெருக்கமும் செறிவும்

நெருக்கி வருத்துதல்

நெரிசலும் நெருக்காட்டமும்

நெரிந்து நொறுங்கிய

நெருப்பில் விட்ட நெய்யைப் போல் நெஞ்சம் உருகுதல்

நெளிந்து வளைந்து செல்லும் பாறை

நெளிவு குழைவு உடைய பாடல்

நெளிவு சுளிவுகள் அறிந்தவன்

நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி

நேசமும் ஆசையும் நிறைந்த நெஞ்சம்

நேசமும் பாசமும் கொண்ட

நேர்ந்து நிரவிப் பலருக்கும் வழங்குதல்

நேர் நிதானம் தெரியாதவன்

நேர்மைக்கும் நீதிக்கும் நிலைக்களமானவர்

நேர்மையும் சீர்மையும் உடையவர்

நேர்மையும் செம்மையும் நிரம்பிய உள்ளம்

நேர்மையையும் சீர்மையையும் நெஞ்சாரப் போற்று

நேரம் காலம் தவறாமல் வருதல்

நேரம் காலம் தெரியாமல் புகுதல்; வருதல்; பேசுதல்;

பேசிக் கொண்டிருத்தல்

நேருங் கூறுமாய் (- நெட்டையுங் குட்டையுமாய்) அறுத்

துப் போட்ட காய்

நேருஞ் சீரும் இல்லாத காரியம்

நேருஞ் சீருமாய்ப் போகவேண்டும்

நைந்து உருகிப் பதைபதைத்து ஆவி நடு நடுங்குதல்

(குளத். கோ 14)

நைந்து உள்ளம் நெகிழ்தல் (வில்லி 2-103)

8