பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

நைந்து நலிந்து போதல்; நசித்துப் போதல்

நைந்து நைந்து இரங்கி விம்முதல் (கம்ப)

நைந்து நைந்து உள்ளம் நெகிழ்ந்து நெக்குருகல்

(அருட்கவி)

நைந்து நைந்து கசிந்து நிற்றல்

நைந்து நைந்து நெக்குருகும் மனம்

நைந்து பிய்ந்து போன துணி

நைந்து நொந்து உருகுதல்

நைந்து மனம் வருந்தல்

(இஞ்சியை) நைய நறுங்கத் தட்டிப் போடுதல்

நையும் நொய்ய மருங்குல் நங்கை (கம்ப 1-21-35)

நொங்கி நுறுங்கிப்போன பண்டங்கள்

நொசிந்து ஒல்கி நுடங்கும் இடை

நொசிவும் ஒசிவும் உடைய மருங்குல்

நொண்டி சண்டிக்கு உதவவேண்டும்

நொந்து நலிவுற்று

நொந்து நொந்து உள்ளம் நோவுபடல் (அருட்கவி)

நொந்து தளர்ந்து நலி தல்

(மனம் நொந்து வருந்துதல்

நொப்பும் நுரையுமாய் அலையடித்தல்

நொய்தாய் நுண்மையாய் இருக்கும்

நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியாக்கல் (சேனா)

நோக்கம் தளராது ஊக்கம் கொண்டு உழைத்தல்

நோண்டி நோண்டிக் குடைந்து குடைந்து கேட்டல்

நோய் நொடியின்றி வாழ்தல்

நோய் நொம்பலம் இன்றி வாழ்தல்

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெறுதல்

(மனுமுறை)

நோயும் நொடியும் பாயும் படுக்கையுமாய்க் கிடத்தல்