பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

நோயும் பாயுமாகக் கிடத்தல்

நோவு நொம்பலம் இல்லாத

பக்தி சிரத்தையுடன் வழிபடல்

பக்தி சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் வரவேற்றல்

(கல்கி)

பக்தி சிரத்தையும் செயல் திறமையும் உடையவர்

பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து விடல்

பக்தி விசுவாசத்துடன் வணங்குதல்

பகல் செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன் (அகம் 229)

பகிர்ந்து பங்கிடுதல்

பகுத்துப் பிரித்து வகுத்தல்

பகுத்தும் தொகுத்தும் பார்த்தல்

பகுத்தும் வகுத்தும் பிரித்தல்

பகைபழி பாவம் இவற்றிற்கு அஞ்சுதல்

பகையும் பிணியும் பசியும் நீங்கி யிருத்தல் (பெருங்க 5-7-46)

பகையென்றும் நட்பென்றும் பாராது வந்தவர்க்கெல்

லாம் வாரி வழங்கல்

பங்கு பாகம் கேட்டல்; பிரித்தல்

பச்சைப் பசுங்கொடி

பச்சைப் பசுந்தமிழில் பேசல்

பச்சைப் பசேல் என்ற பசும்புற் கம்பளம்

பச்சைப் பசேலெனப் பயிர்பரந்த கழனி

பசி தாகம் மறந்து பணியில் ஈடுபடல்

பசி பட்டினி பஞ்சம் இவற்றால் வாடுதல்

பசி பிணி மூப்புக்களால் வருந்துதல்

பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனுஞ்

சுரக்கென வாழ்த்தல் (மணி 1-70)

பசி ருசி அறியாது