பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பசுங்குதலை மழலையஞ் சொல் (முத்துக் பி த)

பசுமரத் தாணிபோல் பதிதல்

பஞ்சம் பசியினால் பரதவித்து வாடுபவர்

பஞ்சம் பட்டினியால் வாடும் பஞ்சைகள்

பஞ்சைகளும் பரம ஏழைகளும்

பஞ்சை பனாதிகள் (காத்தவராய சுவாமி கதை)

பட்டணங்களிலும் பாக்கங்களிலும் பரவியது செய்தி

பட்டது கெட்டதெல்லாம் சொல்லல்

பட்டபாடும் கெட்டகேடும்

பட்டம் பதவிகளுக்கு இட்டம் வைப்பவர்

பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்புதல்

பட்டிமாடு போலக் கட்டுக் காவலின்றிச் சுற்றித் திரிதல்

பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோபத்

திலும் பிரியம் கொண்டவள் (கல்கி - அலை )

பட்டினியும் பசியுமாக இருத்தல் (பிரதாப அதி 28)

பட்டொளி வீசிப் பறக்குங் கொடி

படபட என்று பறவை சிறகடித்து எழல்

படபடத்துப் பதைபதைத்தது நெஞ்சம் (ஆமாத். பு 12

-18)

படபடப்பும் துடி துடிப்பும் உள்ள

படபடப்போடும் பதற்றத்தோடும் பேசுதல்

படர்கூர் எவ்வம் (பெருங்க 1-46-54)

படர் வெயிற் கற்றை கான்று பாயிருள் பருகும் வெய்

யோன் (காசிகண் 2-16)

படாடோபமோ கர்வமோ இல்லாத(வர்)

படித்தவாய் தேனூறும் பாட்டு

படித்துப் பட்டம் பெற்றவர்கள்

படித்து ரசித்துப் பரவசப்படுதல்

படிப்பு பட்டம் பதவி பணம் பெற்று வாழ்தல்