பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

படிப்பும் பண்பும் உடையவர்

படிப்பு வாசனையில்லாத பட்டிக்காட்டு மனிதன்

படியாத பாமர மக்கள்

படுத்த படுக்கையாய்க் கிடத்தல்

படைத்துக் காத்து அழிக்கும் பரமன்

பண் கனிந்து இனிய பாடல் (சிந் 1398)

பண்ட பதார்த்தங்கள் - உணவுப் பொருள்கள்

பண்டு போல் என்றும் நின்று நிலவும்

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி 257) -

மிகப்பெரிய பெருஞ் செல்வம்

பண்ணமையப் பாடுதல்

பண்ணியல் பாடவல்லார் (ச.4-11)

பண்ணும் பெண்ணும் பிறந்தவிடத்தில் பெருமையுறா

பண்பாலும் பதவியாலும் உயர்ந்தவர்

பண்பும் நண்பும் மாறா நண்பர்கள்

பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் (கலித் 133)

பணங்காசு இல்லாதவன்

பணங்காசு பதவி பட்டம் பெற்றவர்

பணத்தையும் பவிசையும் பெரிதாக எண்ணி

பணம் காசு எதுவும் இல்லாதவன்

பணம், பதவி, பட்டம், படிப்புப் பெற்றவர்

பணமும் குணமும் படைத்தவர்

பணமும் பதவியும் படாடோபமும் பெற்ற மனிதர்

(கல்கி)

பணமும் புகழும் சம்பாதித்தல்

பணிவாகவும் மரியாதையாகவும் வேண்டிக் கொள்ளல்

பணிவு தணிவுகளுடன் வரவேற்றல் (நாமக்கல் கவி)

பணிவும் கனிவும் தோன்றப் பகர்தல்