பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

பணிவும் கனிவும் துணிவும் அமைந்தவர்

பணைத்துப் பெருத்திருத்தல்

பத்தர்கள் மனதில் சித்தித்திருக்கும் (இறைவனின்)

பாதமலர்கள் (மனு முறை)

பத்தரை மாற்றுப் பசும்பொன்

பத்தாவுக் கேற்ற பதிவிரதை

பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட

நூல் (சேக்.பி. த.)

பத்திநெறி பழகாத பாமரன் (குருதாச 1-18-10)

பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று

- அடுக்கிவரும் துன்பங்களைப் பொருட்படுத்தாமை

பதட்டமும் படபடப்பும் கொண்டிருத்தல்

பதவிசாகவும் பாங்காகவும் இருத்தல்

பதறாத காரியம் சிதறாது (பழ)

பதறாமலும் பதற்றமடையாமலும்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்தல்

பதுங்கி ஒதுங்கிப் பார்த்துச் செல்லுதல்

பதைத்து உளம் நடுங்கிப் பயந்திருத்தல்

பதைத்துக் கொதித்து எழுதல்

பதைத்துத் துடித்து வருந்துதல்

பதைத்து நடுங்குதல்

பந்தபாசம்

பந்தம் தொந்தம் இல்லாத

பந்தமற்ற நாதியற்ற பரம ஏழை

பந்தமும் தொந்தமும் பாசமும் அறுத்தல்

பந்தமும் தொந்தமும் பாசமும் நாசப்படுத்தும் முருகன்

(முருகரந்தாதி 28)

பந்தமும் பாசமும் உடைய சொந்தக்காரர்கள்

பம்பை பறட்டையாய்த் தலையை வைத்துக்கொண்

டிருத்தல்