பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பாதகமே செய்யும் படிறர்

பாதகமே நிறை காதகன்

பாதத்தில் விழுந்து பணிந்து முறையிடுதல் (பஞ்ச

வனவாசம் 4)

பாதாதிகேச பரியந்தம் பாடுதல்

பாதுகாத்து ஓம்புதல்

பாதுகாத்துப் பராமரித்தல்

பாமேவு மதுரம் பழுத்து அமுதம் ஒழுகும் பசுங்கு தலை

மழலையஞ்சொல் (குமர 351)

பாயிருள் பருகி உலகெலாம் விளக்கும் பகலவன் (காசி

கண் 9-29)

பாயும் படுக்கையுமாகக் கிடத்தல் - படுத்த படுக்கை

யாகக் கிடத்தல்

பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை

வன்

பார்த்த கண் பூத்துப் போதல்

பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போச்சு

பாராட்டவும் போற்றவும் கடமைப்பட்டிருத்தல்

(நெடுஞ்செழி)

பாராட்டிச் சீராட்டி வளர்த்தல்

பாராட்டும் பரிசும் பெற்ற பாவலர்

பாரித்து ஓங்கிப் பூரித்த பைம்பொற் புயம் (குமர 424)

(சந்தோஷத்தினால்) பாரித்துப் பூரித்துப் போதல் (பிர

தாப. அதி 6)

பால்மணம் மாறாப் பச்சிளங் குழந்தை

பால்மணம் மாறாப் பாலகன்

பாலார் துவர்வாய்ப் பைம்பூட் புதல்வன் (நற் 369)

பாலும் தேனும் பாயும் நாடு

பாலும் பழமும் தின்று வளர்ந்தவன்