பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த அன்னை

பாலூட்டித் தாலாட்டிப் பாங்குடனே வளர்க்குந் தாய்

பாலூட்டித் தாலாட்டி நீராட்டிச் சீராட்டி வளர்த்தல்

(பிரதாப. அதி 26)

பாவதோஷத்துக்குப் பயந்தவன்

பாவம் பழி பகை இல்லாது வாழ்தல்

பாவமும் பழியும் அடைதல் ; அஞ்சாமல் செய்தல்

பாவலரும் நாவலரும் பாராட்டும் பண்பினர்

பாவலரைப் போற்றும் காவலர்

பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும் ஆயமும்

நினையாத பால்மொழியாள் (ஐந்திணை. ஐம் 33)

பிக்கல் பிடுங்கல் இல்லாத உத்தியோகம்

பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடு (சுதேசமித்)

பிச்சுப் பிடுங்கல் - பிக்கல் பிடுங்கல், தொந்தரவு

பிடிக்குள் அடங்கும் துடியிடையினாள்

பிடியிடை ஒடுங்கும் கொடியிடை மருங்குல் (பெருங்க

1-48-138)

பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளுதல்

பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் (பெரும்பாண் 199)

பிணக்கும் பூசலும் ஏற்படல்

பிணி மூப்புச் சாக்காடு

பித்தர் போலப் பேதுறுதல் (நைட 261)

பித்தரின் திகைத்து உளம் பேதுறல் (இரசட் 21-251)

பித்தரும் பேதையரும் பிதற்றுஞ்சொல்

பித்தனெனப் பிதற்றல்

பித்துப் பிடித்த உன்மத்தன் போலப் பேசுதல்

பிய்த்துப் பிடுங்கிக் கொள்ளல்

பிய்த்துப் பிரித்தல்