பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

பீடும் சிறப்பும் பிறங்கியவர்

பீடும் பெருமையும் பெற்றவர்

பீதியும் கலக்கமும் அடைதல்

பீதியும் குலை நடுக்கமும் உண்டாதல் (கல்கி)

பீதியும் பயமும் அடைதல்

பீறிட்டுப் பாய்ந்தொழுகும்

பீலிமஞ்ஞை ஆலுஞ் சோலை (நற் 357)

பீறிட்டுப் பொங்கி வழிதல்

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் பொருட்படுத்தாதிருத்தல்

புகழ்ந்து கொண்டாடல்; பாராட்டுதல் ; போற்றுதல்

புகழும் பிரபலமும் அடைதல் (கல்கி)

புகழும் புண்ணியமும் சம்பாதித்தல்

புகழும் பெயரும் சம்பாதித்தல்

புகழும் பெருமையும் பெற்று வாழ்தல்

புடம் போட்டு எடுத்த பொன் போல் ஒளி விடல்

புண்ணியத்தை நோக்கும் கண்ணியவான் (மனுமுறை)

புண்ணியமுண்டு புகழுண்டு

புத்தம் புதிய புத்தகம்

புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழின் மழலை (குமர

105)

(உயிர்களுக்குப்) புத்தி சித்தி முத்தியளிக்கும் பெரு

மான்

புத்தியினாலும் யுக்தியினாலும் பிழைத்தல்

புத்தியும் சக்தியும் உடைய ஜனங்கள் (பிரதாப 38)

புத்திரமித்திர களத்திராதிகளொடு பொலிதல் (தமிழ்ப்

பா 680)

புத்துணர்ச்சியும் புத்துயிரும் ஊட்டுதல்

புத்துணர்ச்சியும் புதிய ஊக்கமும் பெறல்

புத்துயிரும் புது ஊக்கமும் அளிக்கக்கூடிய