பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

புத்துயிரும் புதுவாழ்வும் அளித்தல்

புதுக்கடி கமழுஞ் செவ்வாய்ப் புதல்வன் (கூர்மபு 29-10)

புதுமை பூத்துக் குலுங்கல்

புதுமையும் அழகும் பொலிவுமுடைய

புதுமை(யை)யும் புரட்சி(யை)யும் ஏற்படுத்தல்

புதுமையும் பொலிவும் புத்துணர்வும் கொண்டு

புயலெனத் தீயெனப் பரவியது (மறை. திருநாவுக்கரசு)

புரசலும் பூசலும் (வை மு கோ)

புரட்டும் உருட்டும் வல்ல - தந்திரம்வல்ல

புரட்டுருட்டு - வஞ்சகச் சொல்

புரியாத புதிர்

புரையாப் புதுமைப் பெரியோர் (பெருங்க 2-2-135)

புல் பூண்டுகள் செடி கொடிகள் வளராத பாலை

புல் பூண்டுகளோ செடிகொடி மரங்களோ முளைக்காத

இடம்

புல்லும் புதரும் செறிந்த நிலம்

புலம்பிக் கலங்கி அழுது அரற்றுதல்

புலம்பித் தேம்பியழுதல்

புலவர் பாடும் புகழுடையோர் (புறம் 27)

புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை (யுடையவன்)

புறம் 278)

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல் (புறம் 21) புல

வரை - பாடுவோரின் அறிவெல்லை

புலவரைப் போற்றும் புரவலர்

புலன்களை வென்றார் - முனிவர்

புலனழுக்கற்ற அந்தணாளன் (புறம் 126)

புலமையும் திறமையும் வாய்கப்பெற்ற

புலமையும் புதுமையும் பூத்த பொன்மொழியாளர்

(அண்ணா)