பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

பொருமினோம் புலம்பினோம் பதறினோம் கதறினோம்

(பிரதாப 46)

பொருள் இல் புன் மொழி (குமர 313)

பொருளும் பொன்னும் போகமும் வேண்டாது அருளும்

அன்பும் அறனும் வேண்டுதல் (பரிபா 5)

பொல்லாப் புழுமலி நோய்ப்புன் யாக்கை

பொல்லாரை அழித்து நல்லாரைக் காத்தல்

பொலிந்து விளங்கும்

பொலிவும் வலிவும் பெற்றுள்ள

பொற்றொடி வயிறு வாய்த்த பொங்கெழிற் புதல்வன்

(பாகவத பு 10-14-9)

பொறுத்து நிறுத்தி எழுதுதல்

பொறாமையும் துவேஷமும் (கல்கி)

பொறாமையும் சினமும் பொங்கப் பேசுதல்

பொறாமையும் பொச்சரிப்பும் அடைதல்

பொறாமையும் பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த

உலகம் (கல்கி)

பொறாமையையும் எரிச்சலையும் கிளப்பிவிடல்

பொன்செய் கிண்கிணிப் புதல்வர் (பெருங்க 1-44-183)

பொன் புனைந்து இயன்ற பைம்பூண் (குமர 105)

பொன்னாடு ஒத்த தென்னாடு (அமிச 1)

பொன்னும் பொருளும் உடையவன்

பொன்னும் பொருளும் புகழும் வேண்டும்

பொன்னும் பொருளும் போகமும் புகழும் வேண்டா

தவர்

பொன்னும் பொருளும் வாரி வழங்குதல்

பொன்னெழுத்துக்களில் பொறித்து வைத்தல்

பொன்னெனக் கண்ணெனப் போற்றுதல்