பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


அதட்டி விரட்டுதல்

அதலகு தலம்- கலகம், குழப்பம், அமளி

அதவல் குதவல்- தீவனஞ்செரியாது கழிந்த மலம்

அதிகாரமும் அந்தஸ்தும் உடையவர்

அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவோர்

அதிசயமான அபூர்வமான வரலாறு- கல்கி

அதிர்ச்சியும் மிரட்சியும் அடைதல்

அதிருப்தியோ அசூயையோ கொள்ளாமை - கல்கி

அந்த சந்தமான ஆள் - அழகான ஆள்

அந்தம் இல் அரும்பெரும் புகழ் (கம்ப 2-1-43)

அந்தம் இல் உவகையோடும் அகங்களிப்புறல் - கூர்மபு 29-24

அந்தம் மிகுந்த சந்தத் தமிழில் எழுதுதல்

அந்தமில் இன்பத்து அழிவில் வீடு (பரிமேலழகர்)

அந்தமில்லதோர் வெந்துயர்க்கடலில் ஆழ்தல் - காசி கண்: 13-30)

அந்தமும் ஆதியுமில்லா அரும்பெருஞ் சோதி

அந்தி சந்திகளில் ஆண்டவனைத் தொழுதல்

அந்தீங்கு தலை மழலை (குமர 391)

அந்தோ என்று அலறல் ; இரங்குதல்

அநீதிகளையும் அக்கிரமங்களையுங்கண்டு கொதித்தல் - கல்கி

அப்பழுக்கற்ற அந்தணாளன்

அப்பழுக்கு இல்லாத தூயமனம்

அபகீர்த்திக்கும் அவமானத்துக்கும் ஆளாதல்- கல்கி

அபயம் அபயம் என்று அழுது புலம்புதல் (பஞ்ச. வனவாசம்-6)

அபயம் அபயமென்று அலறி முறையிடுதல்

அபயமளித்து ஆதரவாக நிற்றல்