பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

முக்கலும் முனகலும் உடைய நோயாளி

முக்காலும் மூணு தரம் சொல்லுதல்

முக்கித் தக்கி மூட்டையைத் தூக்கிக் கொள்ளல்

முக்கி முனகி மலைமேல் ஏறுதல்

முகிழ் என முகிழ்ந்த கொங்கை முன்றில் (பாகவத பு

10-30-3,

முகுளித வகுளம் - மலர்விடும் மகிழமரம் (திருப்பு 512)

முகை முல்லை வென்று எழில் முத்தேய்க்கும் வெண்பல்

(பரிபா 8)

முட்டவும் எட்டவும் அரிதாகிய இடம் (தக்க 282)

முட்டி முரண்டுதல் - அருமுயற்சி எடுத்தல்

முட்டி மோதுதல்

முட்டி மோதிக் கூட்டத்திற்குள்ளே நுழைதல்

முட்டி மோதிக்கொண்டு ஓடுதல்

முடலையாக்கை முழுவலி மாக்கள் (பெரும்பாண் 61)

முடி முதல் அடிவரை

முடியுடை மூவேந்தர்

முண்டும் முடிச்சுமாய்க் கிடக்கும் விறகு

முண்டு முடிச்சுக்கள் இல்லாத கயிறு

முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிஞர்

(கம்ப பாயிரம் 5)

முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறனும் வாய்ந்த

(வர்)

முத்தமிழ் வித்தகர்

முத்தவெண் முறுவல் முளரிவாள் முகத்தினன் (பிரபு

10-39-4)

முத்தெனமுகிழ்த்த மூரல் முறுவல் (பாகவத பு 10-6-29)

முத்தி மோந்து அணைத்துக் கொள்ளுதல்