பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

வந்தித்து வணங்குதல்

வந்தித்து வாழ்த்தி முடி தாழ்த்து நின்று வணங்குதல்

(குமர 104)

வம்பருந் தும்பரும் வழிமறித்து அடித்தல் (மின்னொளிகு )

வம்பு தும்புகளுக்குப் போகாதவன்

வம்புந் தும்பும் பேசல் - இழிவான பேச்சுப் பேசல்

(திருப்பு 94)

வம்பும் தும்பும் விளைவித்தல்

வம்புந் தும்புமாக வசைபாடல்

வயல் வரப்புகள்

வயலும் வரப்பும் தோப்பும் துரவும் உள்ளவர்

வயாவும் வருத்தமும் பெற்று மகவீனும் தாய்

வயிற்றுக்கில்லாமல் வாடும் வறியர்

வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி மீத்து வைத்தல்

வயிறு ஒட்டி வாய் புலர்ந்து வருந்துதல்

வரத்துப் போக்கு வைத்துக் கொள்ளல் (புதுமைப்)

வரம்பில் பேர் அழகினாள்

வரவு செலவுக் கணக்கு

வரவேற்பும் வாழ்த்தும் படித்துக் கொடுத்தல்

வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை (புறம் 47)

வரிசையாகவும் ஒழுங்காகவும் நிற்றல்

வரிசையும் சிறப்பும் வகையாய்ச் செய்யும்

வரிசை வண்மை தவறாமல் உபசரித்தல்

வரிசை வரிசையாய் அடுக்குதல்

வருக வருக என்று வரவேற்றல்

வருந்தி யழைத்தாலும் வாராத வாரா (நல்வழி 5)

வரை துறையின்றிச் செலவு செய்தல்

வரை முறையில்லாமல் - வரையறையில்லாமல்

வரையாது அள்ளி வழங்கும் வள்ளல்