பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

வரையா ஈகை வள்ளல்

வரையாது வழங்கும் வள்ளல்

வல் உருக்கினும் வைரத்தும் வலுத்த வன்னெஞ்சம்

(இரட்ச 21-84) (வலுத்த - வலுவடைந்த)

வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி (பழ)

வலிந்து நலிந்து பற்றுவர் நமன் தமர் (பெரியாழ்)

வலிந்தும் நலிந்தும் பொருள் கொள்ளல்

வலி யிழந்து நலித் திருத்தல்

வலிவும் உற்சாகமும் அளிப்பது

வலிவும் பொலிவும் உடைய உடல்

வலிவும் வனப்பும் வாய்ந்தவர்

வழக்க ஒழுக்கங்கள்

வழக்கழிவு செய்து வஞ்சித்துப் பேசுதல் (மனுமுறை)

வழக்கு வம்பு எல்லாம் தீர்த்தல்

வழக்கொழிந்து சிதைந்து போதல்

வழிதுறை தெரியவில்லை

வழிபாடும் வந்தனையும் செய்தல்

வழி மேல் விழி வைத்து எதிர்நோக்கிக் கொண்டிருத்தல்

வழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு மதுர அமுது

குழைத்தூற்றும் மழலை (குமர 393)

வழிவகை சொல்லிக் கொடுத்தல்

வழிவழி வந்த கழிபெருங்காதல் (பெருங்க 3-17-109)

வழுத்தி வழிபடுதல்

வள்ளியின் தேனூறு சொல்லுக்கு வாயூறி நின்றவன்

வளங்கெழு திருநகர் (பெருங்க 4-11-2)

வளங்கெழுமித் திகழும்

வளங்கொழித்துச் செழித்த வள நாடு

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு (சிலப் 5-21)

(நனந்தலை - அகன்ற இடமுடைய; மறுகு - தெரு)