பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

வாழ்வுமில்லை வக்குமில்லை

வாழையடி வாழையாய் வருகின்ற பழங்குடி

வாழையடி வாழையென வந்த மரபு

வான் என வழங்கும் வண்மையாளன் (புலவராற் 920)

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி (பட்டினப்

5)

வான்றோய் நல்லிசைச் சான்றோர் (ரா. ராகவையங்

கார்)

வான்றோய் பெரும் புகழ்ச் சான்றோர்

வானகமும் வையகமும் அதற்கு ஈடல்ல

வானம் நாண வரையாது வழங்குதல்

வானவருந் தான வரும் (திருவா) (தானவர் - வித்தி

யாதரர்)

வானவரும் தானவரும் வணங்கும் தெய்வம்

வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்த மரம்

விக்கி விக்கி அழல்

விக்கி விக்கி விம்மியழல்

விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும் ஒத்தொருங்

கமைந்தவன் (பெருங்க 1-35-159)

விசித்து விசித்து விம்மி விம்மி யழல்

விட்ட குறை தொட்ட குறைகளைப் பூர்த்தி செய்தல்

விடயம் ஓரைந்தும் வென்ற ஞானியர் (திருவரங்கப்

பதிற்றுப்பத்தந்தாதி 39)

விட விடக்கும் உடம்பு

விடேன் தொடேன் என்று தொடர்ந்து செல்லுதல்

விண்டலமும் மண்டலமும் போற்றும் தெய்வம்

விண்ணும் மண்ணும் திசையனைத்தும் பரவிய புகழ்

விண்மாரியெனக் கண்மாரி பொழிதல் (நாடோடி)

வித்தக விவேகிகள் (குருதாச 1-15-5)