பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

விதி செய்த சதி

விதிர் விதிர்த்துச் சிலிர் சிலிர்த்து மயிர்க்குச் செறிதல்

(மனுமுறை)

விதிர் விதிர்த்து வேர்த்து மிக நடுங்கல் (மாவிந்தம் 26)

விம்மலும் அழுகையுமாகக் கதறல்

விம்மிக் கொண்டும் விசித்துக் கொண்டும் அழல் (கல்கி)

விம்மிப் பொருமுதல்

விம்மிப் புலம்பல்

விம்மி விம்மி அழுது கண்ணீர் வடித்து நிற்றல் (மனு

முறை)

விம்மி விம்மி மெய் வெயர்த்து வெய்துயிர்த்தல்

விம்மி வெதும்பி வெயர்த்து வெய் துயிர்த்தல் (கம்ப

1-7-17)

விம்மினள் வெதும்பி வெய்துற்று ஏங்கினள் (கம்ப

6-2152)

விம்முறு விழும வெந்நோய் (சிந் 315)

வியர்க்க விறுவிறுக்க ஓடிவரல்

வியந்து நயந்து போற்றுதல்

வியந்து மகிழ்ந்து நயந்து பாராட்டல்

வியப்பும் களிப்பும் அடைதல்

வியப்பும் திகைப்பும் அடைதல்

வியப்பும் திகைப்புமாக நோக்குதல்

வியப்பும் நகைப்பும் விளைவித்தல்

வியப்பும் நயப்பும் விளைவிக்கும் சொற்பொருள் நலங்

கள் (நவநீதகி)

வியப்பும் மகிழ்ச்சியும் விளை(வி)க்கும்

வியப்பும் விம்மிதமும் அடைதல்

வியப்பொடு நயப்பும் விளைவிக்கும் நூல்

வியர்வையும் அயர்வுமாக வேலை செய்வோர்