பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

விரிகதிர்ப் பரிதி

விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் (புறம் 53)

விரிந்து பரந்து கிடக்கும் உலகம்

விரி நீர் வியனுலகம் (குறள் 13)

விரிவாக விளக்கிக் காட்டு (மறைமலை)

விரிவாகவும் விளக்கமாகவும் கூறுதல்

விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்தல்

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை (சிலப்

2-86)

விருந்து வேற்று வந்தால் உபசரித்தல்

விரைவாகவும் திறமையாகவும் செய்தல்

விலங்கு அகன்ற வியன் மார்பன் (புறம் 4)

விவேக விற்பன்னன் - நல்லறிவு மிக்கவன் (பிரதாப 5)

விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போதல்

விழவறுபறியா முழவு இமிழ் மூதூர் (பதிற்றுப் 15)

விழாவும் வேடிக்கையும் மலிந்த ஊர்

விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் விழித்தல்

விழுத் திணைப் பிறந்த ஒழுக்குடை மரபினர் (பெருங்க

1-5-66)

விழுந்தவர்கள் எழுந்திராமல் அழுந்தி விட்டார்கள்

(காத்தவராயன் கதை. ப. 42)

விழு நிதியடுத்த கொழுமென் செல்வம் (பெருங்க)

விழுப்பமும் சிறப்பும் மேம்படு மாண்பும் அடைதல்

விளக்கமும் பொலிவும் பெற்ற

விளக்கினில் விழும் விட்டில் பூச்சி போல் விழுந்து விடல்

விளையாட்டே வினையாயிற்று ; வினை ஆகும்

விறல் மிகு விழுச்சீர் அந்தணர் (பரிபா 1-37)

விறுவிறுப்பும் வேகமும் பொருந்திய ஆலாபனம்

வினையது விளைவின் வந்த வீவருந்துன்பம் (சிந் 513)