பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

வெந்து கருகிப் போதல்

வெந்து விரிந்து விட்ட சோறு

வெப்பமும் தட்பமும்

வெதும்பி உள்ளம் விம்முறல் (நைட 298)

வெம்பிப் புலம்பித் தவித்தல்

வெம்பி விடாய்த்து வெய்யிலில் திரிதல் (பஞ்ச - வன

வாசம் 3)

வெம்பி விம்மி வெய்துறல் (கம்ப 2-3-20)

வெம்பி வெதும்பிப் பிரலாபித்தல்

வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சு (கம்ப 2-8-21)

வெய்துறு விழுமம் (பெருங்க 1-47-346)

வெயில் நுழைபறியாக்குயின் நுழைபொதும்பர் (பெரும்

பாண் 374 ; மணி 4-5)

வெருவி விதிர் விதிர்த்து வெம்பியோடல் (பாரத நாட

கம்)

வெள்ளிடை மலைபோல் தெள்ளிதின் தெரியும்

வெள்ளி வெண்ணிலவு (குமர 205)

வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை (கொன்றை 87)

வெள்ளைக்குக் கள்ளம் இல்லை

வெள்ளையுஞ் சள்ளையும் - வெண்மையான உடை

வெள்ளை வெளேரென்று இருக்கும் காகிதம்

வெளியிட்டு வெளிப்படுத்தல்

வென்று அடிப்படுத்தல்

வெற்ற வெறிது - பயன் சிறிதும் இன்மை

வெற்றி தோல்வியைச் சமமாய் எண்ணுதல்

வெளிச்சென்று கண்ணைக் குத்தும் வெய்யில் (புதுமைப்)

வெறுத்துப் பழித்துப் பேசுதல்

வெறுத்து ஒதுக்கல்

வெறுத்தொதுக்கி லிலக்கிவிடல்; விலக்கி வைத்தல்