பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறக்கப் பறக்கப் பாடுபடுதல் - ஓடியாடிப் படுபடுதல்
அறம் கரை நா - அறத்தைப் பேசும் நாக்கு
அன்ன ஆகாரம் - உணவு
அன்ன பானங்கள் - உணவும் நீரும்
அன்னாகாரம் - உணவு
அஸ்திரம் - அம்பு
ஆக்கை - உடல்
ஆச்சோ - ஆயிற்றோ
ஆசார அனுட்டானங்கள் - ஒழுக்க நெறிமுறைகள்
ஆசி - ஆசீர்வாதம்
ஆடகம் - பொன்
ஆணவம் - அகங்காரம்
ஆணித்தரமாக - உறுதியாக
ஆணையிடல் -சத்தியம் செய்தல்
ஆதி - முதல், தோற்றம்
ஆதிக்கம் - செல்வாக்கு
ஆய்தல் - ஆராய்தல்
ஆயம் - தோழியர்
ஆயாசம் - களைப்பு
ஆர்ப்பரித்தல் - ஆரவாரஞ்செய்தல்
ஆர்ப்பாட்டஞ் செய்தல் - கலவரஞ் செய்தல்
ஆர அமர ஆராய்தல் - அமைதியாக நெடிது ஆராய்தல்
ஆரஞர் - பெருந்துன்பம்
ஆலாபனம் - இசை
ஆலும் - ஆடும்
ஆள்வினை - முயற்சி
ஆஸ்தி பாஸ்தி - சொத்து சுகம்
இகபர இன்பம் - இம்மை மறுமையின்பம்
இகழ் - இகழ்ச்சி
இச்சக வார்த்தை - முகமன் வார்த்தை
இசைசால் - புகழ்பொருந்திய




இட்டம் - விருப்பம், ஆசை
இடையறவு - இடையீடு
இந்து - சந்திரன்
இமிழ் - முழங்கும்
இமிழ் கடல் - ஒலிக்குங் கடல்
இருகளிறு - பெரிய ஆண்யானை
இருள் முழக்கு - இருட்செறிவு
இலங்கும் - தோன்றும்
இழை மருங்கு - நூலிழையின் திண்மை
இளைப்பு - சோர்வு
இற்றிடை - சிறுத்த இடை
இறுதி - மரணம்
ஒழுக்க நெறிமுறைகள்
இன்னா அரும்படர்-இன்னாமை தரும் பெருந்துன்பம்
இனைந்து - வருந்தி
ஈர்ங்கை - சோறுண்டு அலம்பிய ஈரக்கை
ஈறு - முடிவு
ஈனம் - குற்றம், குறை
உண்டி - உணவு
உப்புச்சப்பில்லாத - பயனற்ற
உருக்குலைந்து போதல் - உருச்சிதைதல்
உரையிறந்த - சொல்ல முடியாத
உலவா - குறைந்த
உலறி - வருந்தி
உள் மகிழ் உவகை - உள்ளம் மகிழ்ந்த உவகை
உள்ளக் குறிப்பு-மனக்குறிப்பு
உவகை - மகிழ்ச்சி
உவட்டெடுத்தல் - மேலிடல்
உவரி - கடல்
உற்றார் - உறவினர்
உறையுள் - தங்குமிடம்
உன்மத்தன் - பித்தன்
ஊண் - உணவு
ஊதாரி - பணத்தைக் கண்டபடி செலவிடுபவன்