பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

நின்மலன் குற்றமற்றவன்; கடவுள்
நிஷ்டூரம் - வீண்பழி
நுண் இழை நுசுப்பு - நுண்ணிய இழைபோன்ற இடை
நுண்மதி - கூரிய அறிவு
நுண்மாண் நுழை புலம் - நுண்ணிய மாட்சிமைப்பட்ட கூரிய அறிவு
நுணங்கிய - கூர்மையான
நூலறிவு - கல்வியறிவு
நூற்கலிங்கம் - நூலாடை
நெகிழ்த்தல் - தளரச்செய்தல்
நெய்த்து - நெய் பூசப்பெற்று
நெறிந்து - நெறிப்புப்பெற்று
நேசம் - அன்பு
நைந்து - நசித்து
நொம்பலம் - நோய், துன்பம் கொள்கை
நொய் - உடைந்த அரிசி; குறுணை
நொய்தாக - இலேசாக
நொய்ம்மை - இலேசானது
பகலவன் - சூரியன்
பகவன் - இறைவன்
பகிரண்டம் - வெளியுலகம்
பஞ்சை - ஏழை
பட்டி தொட்டிகள் - சிற்றூர்கள்
படர்கூர் - துன்பம் நிறைந்த
படாடோபம் - ஆரவாரம், பகட்டு
பணைத்து - பெருத்து
பதவிசாக - ஒழுங்காக
பந்தபாசம் - ஒட்டு உறவு
பரனே - மேலானவனே
பரிச்சயம் - அறிமுகம்
பருதியஞ் செல்வன் - சூரியன்
பலவந்தம் - பலாத்காரம்
பவிசு - பெருமை, அந்தஸ்து
பாகு - சர்க்கரைப்பாகு



 பாசம் - பற்று, அன்பு
பாட்டம் - பாட்டு
பாடகம் -பெண்களின் காலணி வகை
பாதாதிகேச பரியந்தம்-பாதம் முதல் தலைவரை
பாமரன் - படிப்பில்லாதவன்
பாயிருள் - பரந்த இருள்
பாரித்தல் - பெருத்தல்
பாரித்து - பருத்து
பால் மொழியாள் - பால் போன்ற இனியமொழியாள்
பாலார் துவர்வாய் - பால் பொருந்திய சிவந்த வாய்
பாவன்மை - பாட்டுப் பாடும் வன்மை
பாவனை - மனக்கருத்து,கொள்கை
பிடி முரண்டு - பிடிவாதம்
பிடியிடை ஒடுங்கும் கொடியிடை - ஒரு கைப்பிடிக்குள் ஒடுங்கும் அளவினதான
கொடி போன்ற இடை
பிடிவாய் - பெண் யானையின் வாய்
பிணக்கு - மன வேறுபாடு
பித்தலாட்டம் - ஏமாற்று; புளுகு
பிரம்மப் பிரயத்தனம் - பகீரதப் பிரயத்தனம், கடு முயற்சி
பிரலாபித்தல் - வாய் விட்டு அலறுதல்
பிறங்கு - விளங்குகின்ற
பீடு - பெருமை
பீதி - இலி பேரச்சம்
பீலி மஞ்ஞை - இறகுடைய
புடம்போடல் - தீயுள் போட்டு வைத்தல்