பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166



முகிழ்த்த - தோன்றிய
முசியாமல் - (செமிப்புக்) குறையாமல்
முடலையாக்கை - வலிமை பொருந்திய உடல்
முத்தர் - பற்றற்றவர்
முத்தி - முத்தமிட்டு
முப்பொழுது - முக்காலம்
முயக்கம் - புணர்ச்சி
முயக்கு - புணர்ச்சி
முரிதிரை முத்து - முரிகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய
முத்து
முருந்து-மயிலிறகின் அடி
முல்லை - முல்லை மலர்
முழவு இமிழ் - முழவு முழங்கும்
றழவுறழ் - மத்தளம் போன்ற
முள் எயிறு - முள் போன்ற பல்
முளரிவாள் முகம் - தாமரை போன்ற ஒளி பொருந்திய முகம்
முறுவல் - பல்; புன்னகை
மூப்பு - முதுமை
மெச்சுதல் - பாராட்டுதல்
மேனி - உடல்
மையல் - மயக்கம்
மோழை- கொம்பில்லாத மாடு
மௌனி - வாய் பேசாது இருப் பவன்
யுக்தி - கூரிய அறிவு
ரதகசதுரக பதாதிகள் - தேர், யானை, குதிரை, காலாட் படைகள்
ரோஷம் - மான உணர்ச்சி
வடிகட்டிய முட்டாள் - முழு மூடன்
வண்மை - கொடை
வந்தித்தல் - வணங்குதல்
வம்பளப்பு-ஊர்வம்பு பேசுதல்



வயா-மகப்பெறும் துன்பம்
வர்த்தமானம் - நிலவரம்; நிகழ்ச்சி
வரிசை - சிறப்பு; அடுக்கு
வல் உருக்கு - வலிமையான எஃகு
வாஞ்சை - அன்பு, பாசம்
வாட்ட சாட்டமான ஆள் -நல்ல தேகக்கட்டுடைய ஆள்
வாயல் முறுவல் - பொய்ப் புன்னகை
வான் - மேகம்; மழை
விச்சை - கல்வி
விடயம் - ஐம்புலன் உணர்வு
வீண்டலம் - விண்ணுலகு
விண்மாரி - வான் மழை
வித்தகம் - சாமர்த்தியம்
விநயம் - மதிப்பு, பணிவு
விம்மிதம் - ஆச்சரியம்
வியன் ஞாலம்-அகன்ற உலகம்
விரிகதிர்ப்ப ரிதி - விரிந்த கிரணங்களையுடைய சூரியன் விலைக்கணிகை - விலை மாது
விழலுக்கு - வீணுக்கு
விழவறு பறியா - விழா அறுதல் இல்லாத
விழுச்சீர் - பெருஞ்சிறப்பு
விழுத்திணை -உயர்ந்த குடி
விழுநிதி - சிறந்த செல்வம்
வீழுமம் - துன்பம்
விறைவு - விருப்பம்
விள்ளுதல் - வாய் திறந்து கூறு
விறல் - வெற்றி [தல்
வீறாப்பு - தற்பெருமை
வீறுசால் - பெருமை பொருந்திய
வெங்கொடிய - மிகக்கொடிய
வெட்டிக்கு-வீணுக்கு, வீணாக
வேட்கை - ஆசை, விருப்பம்
வைப்பு - இடம்