பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

அவசியமும் அவசரமுமான வேலைகள்

அவதியும் அவமானமும் அடைதல்

அவமதித்து அலட்சியமாய் நடத்தல்

அவமதிப்பும் அவதூறும் செய்தல்

அவ்வியம் அவித்த சிந்தை அருந்தவர் (வேங்கடபு 1-21)

அவலித்து ஆற்றாது அழுதல் (சிந்-1399)

அவளை துவளை-கதம்ப உணவு, தாறுமாறு

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

அவிச்சுவையல்லது கவிச்சுவையறியாதார்

அவிர்துகில் புரையும் அவ்வெள் அருவி (குறிஞ் சிப் 55)

அவிழ்ச் சுவையன்றித் தமிழ்ச்சுவையறியாதவர்

அவிழ்த்து நெகிழ்த்தல்

அழகாக அலங்காரமாக அணி செய்து கொள்ளல்

அழகு ஒழுக எழுதுதல்; பேசுதல்

அழகு ஒழுகும் எழில் முகம்

அழகுக்கு அழகு செய்யும் அணங்கு

அழகும் அமைதியும் நிலவும் இடம்

அழகும் அருமைப்பாடும்

அழகும் அறிவும் ஒருங்கேயமைந்தவர்

அழகும் இளமையும் வாய்ந்தவர்

அழித்து ஒழித்து விடல்

அழித்துக் குலைத்தல்

அழிந்தொழிந்து போதல்

அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்தல் (திருப்பு.)

அழுங்கி அரற்றுதல்

அழுகள்ளன் தொழுகள்ளன்-பாசாங்கு செய்வோன்

அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்