பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15

அளவிட்டு மதிப்பிட முடியாத

அளவையால் அளப்பரும் அரிய சோதி-(நாகை-பு. 4-42-41)

அளாய்க்குழாயாய்ச் செய்தல்- பரபரப்பாய்ச் செய்தல்

அளிகளியத் திருவருள் கனியுங்கனி- உமையம்மை (குமர-81)

அறாட்டுப் பாட்டு - போதியதும் போதாததும்

அற்பசொற்பமானவன் அல்லன்

அற்பசொற்பம் - மிகக்கொஞ்சம் ; சிறிதளவு

அற்பத்துக்கு அற்பமான காரியங்கள் (புதுமைப்)

அற்பமாகத் துச்சமாக மதித்தல்

அற்புதம் அதிசயம் அசாத்தியம் - கல்கி

அற்புதமாகவும் அழகாகவும் அமைந்திருத்தல்

அற்றகுற்றம்- பெருஞ்சேதம், பொருள் நட்டம்

அற்ற குற்றம் பார்க்க ஆள் கிடையாது. (பழுது, கேடு.)

அற்றது பற்றெனில் உற்றது வீடு - பழ

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அன்புடன் அளித்தல் நவ நீதகி.

அறக்கப் பறக்கப் பாடுபடுதல்; ஓடுதல்

அறந்தரு நெஞ்சின் அறவோர் - (சிலப். 15-7)

அறநெறி வாழும் அரு நிலையர்

அறம் கரை நாவின் ஆன்றோர் (ஞானா 24)

அறம் பொருள் இன்பம் வீடு

அறம்புரி நெஞ்சின் அறவோர் (சிலப். 15 - 115)

அறம் புறம் எல்லாமறிதல் - முழுதும் ஆய்ந்தறி தல்

அறம் முதல் நான்கும் திறமுற ஆற்றுதல்

அறமும் மறமும் அறிந்துணர்ந்தவன்

அறவோரும் திறவோரும் புகழும் அறிஞர்

அறவோரும் துறவோரும் வணங்கும் கடவுள்