பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

அன்பு அறிவு சாந்தம் அருளுடையார் (நீதி வெ. 94)

அன்புகொண்டு ஆதரித்து உதவல்

அன்புடன் அளிப்பதை இன்புடன் ஏற்றுக்கொள்ளும் பண்பினர்.

அன்புடனும் அனுதாபத்துடனும் பேசல்

அன்பும் அக்கறையும் செலுத்துதல் (அண்ணா)

அன்பும் அபிமானமும் காட்டுதல்

அன்பும் அமைதியும் ததும்பும் இன்பமுகம்

அன்பும் அருளும் அறமும் உடையவர்

அன்பும் அனுதாபமும் காட்டுதல்

அன்பும் ஆசையும் காட்டுதல்

அன்பும் ஆதரவும் காட்டுதல்

அன்பும் இன்பமும் பெருக வாழ்தல்

அன்பும் பண்பும் உடையவர்

அன்பும் பண்பும் நண்பும் நிறைந்தவர்

அன்பும் மதிப்பும் காட்டல்

அன்புடனும் மரியாதையுடனும் நடத்தல்

அன்போடும் அச்சத்தோடும் வணங்கல்

அன்போடும் ஆதரவோடும் அளித்தல்

அன்போடும் பரிவோடும் கூறல்

அன்றும் இன்றும் இனி என்றும்

அன்றும் இன்றும் என்றும் நிலை நிற்கும்

அன்று தொட்டு இன்று காறும் (குமர 470)

அன்று தொட்டு இன்று மட்டும் (செந்திற்கோ 423)

அன்று முதல் இன்றுவரை நின்று நிலவும்

அன்ன ஆகாரமில்லா திருத்தல்

அன்ன நடை போடும் கன்னி

அன்னபானங்கள் 2