பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

ஆர்வமும் அக்கறையும் காட்டுதல்

ஆர்வமும் ஆவலும் உடையவர்

ஆர்வமும் உற்சாகமும் உள்ளவர்

ஆர்வமும் ஊக்கமும் அசையா உள்ளமும் கொண்டு உழைத்தல்

ஆர்வமும் ஊக்கமும் காட்டுதல்

ஆர அமர ஆலோசித்துத் தீர முடிவு செய்தல்

ஆர அமர ஆராய்தல் ; சிந்தித்தல் ; ஆலோசித்துப் பார்த்தல்

ஆர அமர யோசித்து முடிவு செய்தல் (கல்கி)

ஆர தீர யோசித்தல்

ஆரந்தாழ்ந்த அணிகிளர் மார்பு (புறம் 59)

ஆரமும் அகிலும் நாறும் அருவியும் சுனையும் (வில்லி 12-2)

ஆரவார ஆடம்பர முறைகளின்றிச் செயல் செய்தல்

ஆரவாரத்துடனே ஆர்ப்பரித்துக் கொக்கரித்து (இராமப். அம் 14)

ஆரவாரமின்றி அமைதியாகச் செய்தல்

ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் செய்யும்

ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்து அடிபணிதல் (வராகிமாலை 2)

ஆராமை சோராமையாயிருத்தல் - மிகக் களைப்பா யிருத்தல்

ஆராய்ந்து உணர்ந்து பேசுதல்

ஆராய்ந்து தெளிதல்

ஆருமற்ற அத்தவனக் காடு

ஆருயிரே செல்வமே அமுதே யருங்கிளியே என்று அழுது புலம்பல் ; கொஞ்சுதல்

ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில் போல் எந்நாளும் முசியாமல் வாழ்ந்திடுவீர் (பஞ்ச வனவாசம் 4)