பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

இருவல் நொருவலான அரிசி- இடிந்தும் இடியாதது மான அரிசி

இருவினை யொப்பு மலபரிபாகம்

இரைச்சலும் சந்தடியுமாயிருக்கும் இடம்

இரைத்துத் திரைத்து நுரைத்து ஓடும் பேராறு (குமர 27)

இரைத்துத் திரைத்து நுரைபொங்குங்கடல் (தணி கைச்சந்.மு 31

இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப் பட்ட நூல் (களவியலுரை )

இல்லறம் என்னும் நல்லறம் புகும் மண நாள்

இல்லாததும் பொல்லாததும் சொல்லாதே

இல்லாது பிறவாது அள்ளாது குறையாது (பழ)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் (குறள் 752)

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை (மூதுரை 21)

இலக்கண இலக்கியம் விளக்கமாய்க் கற்றவர்

இலகு பேரெழில் திருமேனி (இரட்ச 21-410)

இலகி ஒளிரும்

இலைமறைவு காய்மறைவாய்ச் செய்தல் - இரகசியாமாகச் செய்தல்

இவ்வளவு அவ்வளவு என்று கூறமுடியாது

இழித்த புன்சொற் புன்புலவர் (சிவப்பிர)

இழித்தும் பழித்தும் பேசல்

இழிந்து தாழ்தல்

இழிவும் இகழ்ச்சியும்

இழிவும் கேடும் எய்தாமல் பார்த்துக்கொள்

இழிவும் பழியும் (ஏற்படினும்)