பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

உயிர் கொடுத்து உணர்ச்சியூட்டல்

உயிர்க்குயிராக வளர்த்தல்

உயிர்த்துடிப்பும் ஓட்டமும் உள்ள நடை, நூல்

உயிரும் உடலும் போல ஒன்றியிருத்தல்

உயிரோடு பிறந்து உடலோடு வளர்ந்த இலட்சியம்

உரிமையும் கடமையும் உணராதவர்

உருக்கமும் உணர்ச்சியும் கலந்தபாடல்

உருக்குலைந்து சீரழிந்து போதல்

உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றிவிடும் காதல்

உருகி உருகி நெக்குள் உடைதல் (மனம்)

உருகிக் கசிந்து நெக்கு நெக்குள் உடைந்து (குமர)

உருகியுருகி நெக்குநெக்குள் உடைந்து கசிந்திட்டு அசும்பூறும் உழுவல் அன்பிற் பழவடியார் (குமர 45)

உருகுபேர் உவகை வெள்ளம் உவட்டெடுத்து ஒழுக (கூர்ம பு 21-106)

உருட்டலும் மிரட்டலும் இங்கே நடக்காது

உருட்டித் திரட்டி உண்ணுதல்

உருட்டிப் புரட்டிப் பார்த்தல்

உருட்டி மிரட்டிப் பார்த்தல்

உருட்டுப் புரட்டு ஒன்றும் செய்யாதவன் (உருட்டுப் புரட்டு-வஞ்சகம், ஏய்ப்பு)

உருட்டும் புரட்டும் செய்தல் - வஞ்சகம் செய்தல்

உருண்டு திரண்டிருக்கும் உருளைக்கிழங்கு

உருண்டு திரண்டு பருத்த உடல்

உருண்டு புரண்டுகொண்டு செல்லுதல், ஓடுதல்

உருண்டும் புரண்டும் குதித்தும் கொந்தளித்தும் குமிழியிட்டுக்கொண்டும் செல்லும் ஆறு