பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

உள்ளக்குறிப்பைத் தெள்ளிதின் உணர்தல்

உள்ளங்கசிந்து நெக்குநைந்து கரைந்து உருகல் (திருவா 105)

உள்ளங்கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் (நன்னெறி 8)

உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை

உள்ளங் குலைந்து உருகுதல் (பஞ்ச. வனவாசம் 4)

உள்ளது உரியதெல்லாம் விற்றுவிடல்

உள்ளதை உள்ளபடி சொல்லுதல்

உள்ளதைக்கொண்டு நல்லதைப் பண்ணுதல்

உள்ளம் பூரித்தேன், உடலம் பாரித்தேன் (பிரதாப் அதி 46)

உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளுதல்

உள்ளம் நைந்து உருகி

உள்ளமும் உடலும் பூரித்தல்

உள்ள முருக்கும் ஒள்ள மர்க்கிளவி (பெருங்க நரவாண 5-32)

உள்ளனும் கள்ளனுமாய் இருப்பவன் (பழ) (உள்ளன் -உளவன்)

உள்ளாளுங் கள்ளாளுமாய் இருப்பவன் - இருபுறத் துக்குமிணங்கிக் கள்ளமாய் நிற்பவன், உளவன்

உள்ளும் புறமுங்கசிந்து ஊற்றெழ நெக்கு உடைதல் (குமர 141)

உள்ளும் புறமும் (புறம்பும்) ஒத்திரு

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் (குறள் 596)

உள்ளுள் உவந்து உள்ளுதல் (கலித் 118)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே

உளங்கனிந்து உருகுதல்; உருகிப் பாடுதல்

உளறிக் குழறிப் (குளறிப்) பேசுதல்