பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36

உற்சாகமும் ஊக்கமும்; எழுச்சியும் ; சுறுசுறுப்பும் (உடையவர்)

உற்சாகமும் குதூகலமும் அடைதல் (கல்கி)

உற்றம் சுற்றங்களுக்கு உதவுதல்

உற்றார் உறவினர் - உறவின் முறையார், இனஞ்சனம்

உற்றார் உறவின் முறையார் எல்லோரும் (இராமப் அம்ப 12)

உற்றார் ஊரார் அறிய மணம் செய்தல்

உற்றார் பெற்றார்க்கு உதவுதல்

உற்றார் பெற்றார் மனைவி மக்கள்

உற்றாரும் மற்றாரும் போற்ற வாழ்தல்

உற்றுணர்ந்து உருகி ஊறி உள்கசிவுடைய பத்தர் (அப் 70-1)

உற்று நோக்கி ஊகித்தறிதல்

உற்றார் மகிழ மற்றோர் புகழ வாழ்தல்

உறுதி குன்றாது ஊக்கம் தளராது

உறுதியாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தல்

ஊக்கம் உடையோர்க்கு ஆக்கம் உண்டாகும்

ஊக்கம் குன்றி ஏக்கங்கொண்டிருக்கும்

ஊக்கமும் உதவியும் அளித்தல்

ஊக்கமும் உழைப்பும் உடையவர்

ஊக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உடையவர்

ஊக்கமும் உற்சாகமும் உடையவர்; கொண்டிருத்தல்; ஏற்படுத்தல்

ஊக்கமும் முயற்சியும் பாராட்டத்தக்கன

ஊக்கமும் வலிவும் வேட்கையும் விழைவும் உடையோர் (பெருங்க 4-2-26)

ஊடலும் கூடலும் உடையதே மனைவாழ்க்கை

ஊடுருவித் துளைத்தல்