பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

எச்சுமிச்சம் இல்லாமல் (சிறிதும் மீதி இல்லாமல் உண்டுவிடல்

எசகு பிசகு - இசகு பிசகு

எஞ்சியதை மிஞ்சியதை எடுத்துக்கொள்

எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விடல்

எட்டிக் காய்போல் கட்டக் கசப்பான

எட்டேணி வைத்தாலும் எட்டாத உயரம்

எடுக்க, இன்றேல் விடுக்க

எடுத்த காரியத்தைத் தொடுத்து முடித்தல்

எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடிதல்

எடுத்துத் தொடுத்தல் - கட்டிப்பேசல், வழக்குப் பிணைத்தல், மாலைகட்டல், இலதையுளதாகக் கூறல்

எடுத்தும் படுத்தும் சொற்களை உச்சரித்தல்

எண்ண எண்ணத் தெவிட்டாத இன்ப அமுது (இள முலை . பி. த. 6-7)

எண்ணத் தொலையாது ஏட்டில் அடங்காது

எண்ணத் தொலையாது ஏடிடங்கொள்ளாது

எண்ணறக்கற்று எழுத்தற வாசித்தல் எண்ணாத

எண்ணமெலாம் எண்ணி நெஞ்சம் புண்ணாதல்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி மனத்தைப் புண்ணாக்கிக் கொள்ளல்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குதல்

எண்ணாத எண்ணி இடைந்திடைந்து ஏங்கியிருந்து மனம் புண்ணாய் மெலிந்து புலம்பல்

எண்ணாததெல்லாம் எண்ணி நெஞ்சு புண்ணாதல்

எண்ணிய கருத்துக்களைத் திண்ணிதின் எடுத்தியம்பல்

எண்ணிய காரியம் திண்ணமாய் முடிக்கும்

எண்ணுக்கு எட்டா இறைவன்