பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

எத்தன் ஏமாற்றுக்காரன்

எதிர்குதிர் ஆகி நின்று எதிர்ப்பு (பரிபா 8-21) (எதிர் குதிர் - மறுதலை)

எதிர்த்துத் தாக்குதல் ; போராடுதல்

எதிர்ப்பும் மறுப்பும் எழுப்பல்

எதிரும் புதிருமாக இருத்தல் - எதிரெதிராக இருத்தல்

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ; படைத்தவர்

எந்த வம்பு தும்புகளுக்கும் போகாதவன்

எய்த்துக் களைத்துச் சோர்ந்துபோதல் (ரகுநாதன்)

எய்ப்பில் வைப்பு - சேமநிதி

எய்படை எறிபடை (- அஸ்திர சஸ்திரம்) கொண்டு போரிடல்

எரிந்து கரியாதல்

எரிந்து பொசுங்கிச் சாம்பராய்ப் போதல் (கல்கி)

எரிபொரி என்று எரிந்து விழுதல்

எருக்கும் குருக்கும் முளைத்த இடம்

எருமையைவிடப் பொறுமையுள்ளவன்

எல்லாம் வல்ல இறைவன்

எல்லாமாய் அல்லதுமாய் இருக்கும் இறைவன்

எல்லார்க்கும் நல்லவனாய் வாழ்தல்

எல்லையில்லாத தொல்லை விளைவித்தல்

எலும்புந் தோலுமாக மெலிந்திருத்தல்

எவ்வங் கூர்ந்த ஏமுறு துயரம் (நற் 273)

எவ்வுயிருந் தம்முயிர்போலப் பாதுகாத்தல்

எழில் ஒழுக அமுதமொழி பேசும் (இள மடந்தை )

எழில் ஒழுகும் (கொழிக்கும்) அழகுத் திருமுகம்

எழில் குலுங்கும் செழிப்பு

எழிலும் இனிமையும் நிறைந்த