பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41

என்னமோ ஏதோ என்று எண்ணிப் பயப்படல்; கவலைப் படல் ; பிரமித்துப் போதல் (கல்கி)

ஏக்கத்தினால் ஊக்கம் இழந்திருத்தல்

ஏக்கம் பிடித்து அயர்ந்து தூக்கமின்றி இருத்தல்

ஏக்கமும் ஏமாற்றமும் அடைதல்

ஏக்கன் போக்கன் (கி) - ஒன்றுக்கு முதவாதவன்(ள்)

ஏக்கி போக்கி - ஒன்று முதவாதவன்(ள்)

ஏக்கிரி போக்கிரி

ஏகபோக உரிமையாக அனுபவித்தல்

ஏங்கி ஏங்கி வீங்கிச் சாவு

ஏங்கி இளைத்துத் திகைத்து மனம்வீங்கி விம்மி விழுதல் (கம்ப 2-4-8)

ஏங்கி எதிர்நோக்கி நிற்றல் (வைண 2-10)

ஏங்கித் தவித்தல் ; தவித்துப் புலம்புதல் ; துடித்தல்

ஏங்கித் திகைத்துப் பதைத்துக் கலங்கிட இடர் தாங்கிப் புலம்பல்

ஏங்கித் தேங்கித் தவித்தல்

ஏங்கிப் புலம்புதல்

ஏச்சிலும் பேச்சிலும் வல்லவன் (பழ)

ஏச்சுக்கும் ஏளனத்துக்கும் ஆளாதல்

ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமில்லாமல் (இடம் வைக்காமல்) நடந்து கொள்ளல்

ஏச்சும் பேச்சும் கேட்டல்

ஏச்சையும் எதிர்ப்பையும் சமாளித்தல்

ஏசி நகை செய்து இகழ்தல் (வில்லி 3-43)

ஏட்டிக்குப் போட்டி - எதிருக்கெதிர்; விதண்டாவாதம்

ஏட்டிக்குப் போட்டியாக இடங்காடு செய்தல்

ஏடாகூடம் - தாறுமாறு ; அலங்கோலம்

ஏடாகோடமான - தாறுமாறான