பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42

ஏடும் எழுத்தாணியும்

ஏண்கோண் - கோணல்மாணல்

ஏணல் கோணல் - தாறுமாறு, வளைவு, ஒழுங்கின்மை

ஏணுக்கோண் - உதிரிடையான பேச்சு, ஏட்டிக்குப் போட்டி, ஏறுமாறு

ஏணுக்குக்கோண் பேசுதல் - எதிர்த்துப் பேசுதல், எதிரிடையாகப் பேசுதல்

ஏணைக்குக் கோணை பேசுதல், செய்தல் - ஏட்டிக்குப் போட்டி பேசுதல், செய்தல்

ஏத்திப் பாராட்டுதல்

ஏதம் செய்தவர் கேதம் படுவர்

ஏதுமறியாப் பாமரமக்கள்

ஏப்பை சாப்பை - உபயோகமற்றது, சாரமற்றது ஏப்பை சாப்பையான ஆள் அல்ல

ஏமத்தில் சாமத்தில் எல்லாம் எழுந்திருத்தல்

ஏமம் சாமம் எந்நேரத்திலும்

ஏமம் சாமம் என்றில்லாமல் போதல்

ஏமமும் சாமமும் கூத்தாடுவோர்

ஏமாளியாக்கிய எத்தர்கள்

ஏமாற்றத்தோடும் ஏக்கத்தோடும் முகத்தைத் திருப் பிக் கொள்ளல்

ஏமாற்றமும் எரிச்சலும் அடைதல்

ஏமாற்றமும் வருத்தமும் அளித்தல்

ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருத்தல்

ஏராளமாயும் தாராளமாயும் கிடத்தல்

ஏரி குளங்களில் நீர் நிறைந்திருத்தல்

ஏவல் கேட்குங் காவலர் (பெருங்க 4-1-43)

ஏவல் மேவல் - ஏவல் தொழிலும் உள் வேலையும்