பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஒழுங்காகவும் நிதானமாகவும் மூச்சுவிடல்

ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள

ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டல்

ஒழித்தது பழித்த நெஞ்சம் (அகம் 39)

ஒழித்தழித்தல்

ஒளிதரும் பெருவிளக்கு

ஒளிப்பதோ மறைப்பதோ இன்றி

ஒளியும் அருள் அளியும் உள்ளக்களியுமிக உடைய சிவ

பிரான் (அருட்கவி)

ஒளிவிட்டுச் சுடரும்

ஒளிவின்றி நெருங்க நிறைந்திருத்தல்

ஒளிவு மறைவு இல்லாத

ஒளிவு மறைவு இன்றிப் பேசுதல்

ஒற்றுமையும் ஒத்துழைப்பும் உடையோர்

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவுதல்

ஒறுத்தலினும் பொறுத்தல் உயர்ந்தது

ஒன்றடி மன்றடி - குழப்பம், தாப தடுமாற்றம்

ஒன்றாய்க் கலந்து உறவாடல்

ஒன்றாய் மன்றாய்க் (வேறுபாடின்றிக் கலந்து) குடியிரு

ஒன்று ஊக்கி ஒன்று இழத்தல் உணர்வு உடைமைக்கு

உரித்தன்று (கம்ப 5-2-219)

ஒன்றும் பேசாது சென்று விடுதல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஓங்குயர் பெருஞ்சிறப்பு உடைய (மணி 14-54)

ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரம்

ஓட்டை சாட்டை (-உபயோகமற்றது) இருந்தால் கொடு

(நகர மக்களின்) ஓட்டசாட்டங்களுக்கு அப்பால்

(சோமு-மன்மத)

ஓட்டமாய் ஓடுதல்