பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49

கட்டிளங் காளைப் பருவம்

கட்டிவைத்த பணத்தைத் தட்டிப்பறித்தாற்போல் (பழ)

கட்டுக் கடங்காப் பிடாரி

கட்டுக் குட்டான உடல் - கட்டுள்ள உடல்

கட்டுங்கனமுமா யிருந்தால் - உறவினரா யிருந்தால்

கட்டுங் காவலுமாயிருத்தல் - பெருங்காவலுடைய தாயிருத்தல்

கட்டு செட்டாய் குடித்தனம் நடத்துதல்

கட்டுண்டு மயங்கிக் கிடத்தல்

கட்டுத் திட்டம் பண்ணுதல் - செய்வ திதுவென விதித்தல்

கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடத்தல்

கட்டுப்பாடில்லாமல் கெட்டழிதல்

கட்டும் காவலும் இல்லாது விடப்படல்

கட்டும் திட்டமும் அமைந்த உரை நடை நூல்

கட்டு மட்டு - அளவு) இல்லாமல் செலவிடல்

கட்டை குட்டையாக இருந்த மனிதர் (கல்கி)

கட்டையாயும், குட்டையாயும் இருப்பவன் (கல்கி)

கட்டோடே கனத்தோடே வாழ்தல் - உறவினரோடு வாழ்தல் (அருட்பா )

கடக்கு முடக்கு என்று கட்டைவண்டி போதல்

கடகடத்த ஓட்டை உடைசல் வண்டி (கல்கி)

கடகடெனப் புரண்டு உருண்டோடுதல்

கடம்படு களி நல்யானை (காஞ்சிப் 2-31)

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

கடமைகளும் உரிமைகளும் பொறுப்புக்களும் உணர்ந்தவர்

கடல் மடை திறந்தாற்போல் கவிபாட வல்லவர்

கடவுள் காட்டுவார், ஊட்டுவாரா?