பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50

கடவுள் மீன் கற்பு மாதர் (காசிகண் 2-28)

கடன் வாங்கிக் கடன் வாங்கி உடலைத் தேற்றுதல்

கடாம் பொழி கரடக் களி நல்யானை (குமர 528-5)

கடாவிடைகளால் விஷயத்தை விளக்குதல்

கடித்துக் கொறித்துத் தின்னுதல்

கடிந்து கண்டித்துரைத்தல்

கடுகடுப்பாகவும் வெடு வெடுப்பாகவும் பேசுதல்

கடுகி முடுகிக் காரியஞ் செய்தல்

கடுப்பாயும் வெடுப்பாயும் பேசுதல்

கடுப்போ வெடுப்போ கொள்ளாதவன்

கடுவரற் கலுழிக் கட்கின் சேயாறு (மலைபடு 555)

கடை கண்ணிக்குப் போய் வரல் - கடைவீதிக்குப் போய் வரல்

கடைசல் குடைசல் வேலை - மரவேலை

கடைந்தெடுத்த கழிபெருமடையன்

கண்களி கொள்ளுங் காட்சி (சிலப் 26-73)

கண்களில் தீப்பொறி பறக்க, புருவம் நெரிய, உதடுகள் துடிக்கப் பார்த்தல்

கண்களுக்கு நிறைந்த கட்டழகன்

கண்கவர் கவின்பெறு கட்டடம்

கண்காணித்துக் கவனித்து வருதல்

கண்காது தெரியாமல் அடித்தல் - கண்மூடித்தனமாக அடித்தல்

கண்கெட்டுக் கருத்தழிந்து கலங்குதல்

கண்கொள்ளாக் கவின் பொழிந்த கட்டழகுத் திருமேனி

கண் சிமிட்டிக் கண்சாடை செய்தல்

கண்சிவந்து சீறிக் கடுங்கோபங் கொண்டெழுதல் (இராமப். அம். ப. 30)

கண் செய் கூந்தல் களிமயில் (குமர 349-11)