பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7

முயற்சி செய்தால் - தமிழில் வெளியாகியுள்ள எல்லா நூல்களையும் படித்துப் பார்த்தால் - மேலும் ஓரிரு ஆயிர அடுக்குமொழிகளைச் சேர்த்தல் ஒல்லும் என்ற துணிபு எனக்குண்டு.

தொடக்கத்தில் அடுக்குமொழிகள் எடுக்கப்பெற்ற நூல்களையோ, அடுக்கு மொழிகள் பேசிய சொற் பொழிவாளரையோ குறிப்பிட வேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருந்தது.அதனால் பல அடுக்கு மொழிகளுக்கு அவற்றின்மூலம் இந்நூலில் கொடுக்க முடியாது போயிற்று. மேலும் பெருவழக் கிலுள்ள,அதாவது பலரும் சாதாரணமாக வழங்கும் அடுக்குமொழிகளின் மூலங்களைக் குறிப்பிடுவது மிகவும் முடியாத காரியம். எனவே இன்றியமையாத இடங்களில் மட்டும் பிறையடைப்பில் அடுக்கு மொழிக்குரிய நூல் அல்லது ஆசிரியரின் பெயர்கள் சுருக்க வடிவில் அல்லது முழுவடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. சுருக் கப் பெயர்களின் விளக்கம் இந்நூலி னிறுதியில் அருஞ்சொற் பொருளகர வரிசைக்குப் பின்னர்த் தரப்பட்டுள்ளன.

தலைசிறந்த எழுத்தாளர்கள், சொற்பொழி வாளர்கள் மட்டுமன்றிச் சாதாரணமானவர்களும் அடுக்குமொழிகளைப் புனைந்து எழுதுகின்றனர் ; பேசுகின்றனர். எனவே அடுக்குமொழியில் எழுதுவதும் பேசுவதும் எல்லோர்க்கும் உரிய இன்பக்கலையாகும். சிறப்பாக மாணவர்களுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாய், வழித்துணையாய்த் திகழும் என்று நம்புகிறேன்.

இந்நூல் உருவாதற்கு உதவியாயிருந்த பெயர் குறிப்பிடப் பெற்ற, குறிப்பிடப்படாத எண்ணிலாத எழுத்தாளர்கட்கும்,பல சொற்பொழிவாளர்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி உரியது. இந்த நூலாகிய புது மலரைத் தமிழன்னையின் திருவடித் தாமரையில் வைத்துப் படைப்பதில் மகிழ்ச்சியடை கின்றேன்.

இந்நூலுக்குக் கவிதைப் பண்பு கனிந்த அடுக்கு மொழி களில் அழகுமிக்கதொரு அணிந்துரை வழங்குவதற்கு அன்புடன் இசைந்த உயர்திரு மா. சண்முகசுப்பிரமணியம் அவர்கள் இன்