பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53

கண்ணுக்கும் கருத்துக்கும் அரிய காட்சி

கண்ணுங் கண்ணீருமாகக் கட்டித் தழுவிக்கொண்டு

கண்ணுங் கண்ணீருமாய்க் காலங் கழித்தல் (கல்கி)

கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துப் போற்றுதல்

கண்ணுமண்ணுத் தெரியாமல் (கண்மூடித்தனமாக) அடித்தல்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காய்

கண்ணைக் கவர்ந்து ஒளிருங் கட்டழகி

கண்ணைக் கவர்ந்து கருத்தைப் பிணித்தல்

கண்ணைக் கவரும் வண்ணப் படங்கள்

கண்ணைப் பறிக்கும் வண்ண ஓவியங்கள்

கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்த கண்மாயம்

கண்கட்டு வித்தை கண் முன்னால் நேரில் காண்பது போல (கல்கி)

கண்மண் தெரியாமல் ஓட்டுதல்

கண் மூடிக் கண்விழிப்பதற்குள் - மிகவிரைவில்

கண் மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக

கணக்காகக் கச்சிதமாகப் பேசுதல்

கணக்கு வழக்கில்லாமல் (- அளவின்றிச்) செலவழித்தல்

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம் (கத்தக் கதித்து - நிரம்ப மிகுந்து) (திவ், பெரியாழ் 1-9-31)

கத்தனே நித்தனே சித்தனே சுத்தனே (குருதாச 1 19-3)

கத்திக் கதறிச் சொல்லல் ; அழுதல்

கத்தூரி சவ்வாது புனுகு பூணுதல்

கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு

கதறி ஓலமிடல் கதறிக் கண்ணீர் வடித்து நிற்றல் (மனுமுறை)

கதறியும் பதறியும் கூக்குரலிடுதல்