பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56

கல்யாணம் கார்த்திகை செய்தல் (ரா. ஸ்ரீ. தேசிகன்)

கல்லடிக்கும் வில்லடிக்கும் கருணை புரிந்த கருத்தன் (மனுமுறை)

கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேன் (திருவா 476)

கல்லாத புல்லறிவோர்

கல்லா வெளிற்றுப் புல்லறிவோர் (காசிகண் 86-34)

கல்லி அகழ்ந்து எடுத்தல்

கல்லினம் வல்லென்ற மனம்

கல்லுங் கரடுமான வழு

கல்லுங் கரம்புமாய்க் கிடக்கும் நிலம்

கல்லுங் கரையும்படி கதறல் (கல்கி)

கல்லும் புல்லும் கண்டுருகப் பெண்கனி நின்றாள் (கம்ப 1-மிதிலை 593)

கல்லும் மண்ணும் கலந்தடிக்கும் காற்று ; கலந்து விற்றல்

கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதை

கல்லும் முள்ளும் புல்லும் புதரும் மண்டிக் கிடக்கும் நிலம் (பிரதாப.)

கல்லெடுப்புக் கருமாந்தரம் (பே)

கல்லெறிகளையும் சொல்லெறிகளையும் தாங்கும் வன்மை

கல்லென்றும் முள்ளென்றும் பாராது காட்டுவழியில் நடந்து செல்லல்

கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவர்

கல்வி கேள்விகளில் வல்ல (புலவர்)

கல்வீச்சும் கலாட்டாவும் எதற்கு?

கலகம் கூச்சல் குழப்பம் அடிதடி

கலகலப்பாயும் சுறுசுறுப்பாயுமிருத்தல்

கலகலப்பும் சலசலப்பும் நிலவும் இடம்