பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58

கள்ளமில்லா வெள்ளையுள்ளம்

கள்ளுண்டு களித்துக் கூத்தாடல்

களங்கமளங்கமற்றுப் பேசல்

களப கஸ்தூரிகள் பூசிக்கொள்ளல்

களவுங் கையுமாய் அகப்படல்

களவும் கொலையும் புலையும் தவிர்

களவாணித் திருட்டுப் பயல் (கல்கி)

களிக்குங் கரடக் கடாக் களிறு (பாகவதபு 10-33-5)

களித்து மகிழ்தல்

களிப்புக் கடலில் மூழ்கித் திளைத்தல்

களிப்பும் கலகலப்பாயுமிருத்தல்

களைத்து இளைத்துப் போதல்

களைப்போடும் இளைப்போடும் வந்துள்ளாய்

கற்பனைச் சிறப்பும் கருத்தோவியமும் (கலந்த நூல்)

கற்பகம் நிகர் கொடைக் கன்னன் (- கர்ணன்) (வில்லி 26-74)

கற்பிற் சிறந்த காரிகை

கற்புக் கடம் பூண்ட பொற்புடை நங்கை; பொற்றொடி நங்கை

கற்பும் பொற்பும் உடைய காரிகை

கற்று மனமெனக் கதறியும் பதறியும் நிற்றல் (திருவா 4-73)

கற்றும் கேட்டும் ஆராய்ந்து பயிலுதல்

கற்றோர்க்கும் மற்றோர்க்கும் கழிபேரின்பம் நல்கும்

கற்றோர்க்கும் மற்றோர்க்கும் புரியும் நடை

கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்கு விளங்காத கடுமையான நடை

கற்றோரும் மற்றோரும் பாராட்ட

கறார் கண்டி தமாய்ப் பேசல் - கச்சிதமாகப் பேசல்